Sunday, March 10, 2013
Monday, February 25, 2013
செய்வன திருந்த செய் …!!!
ஒன்றரை ரூபா பெட்டிக்கும்…
ஒரு ரூபா பிசினசுக்கும்
பேரு……
நிர்வாகம்ன்னா….
!!!!!!!!!!!???????????????
பாருங்களேன்… நம்ம
திருநெல்வேலி குசும்ப…….
கலக்கல்….!!!
டீ குடிச்சிருப்பீங்க…
விவா குடிச்சிருப்பீங்க… இதை ரெண்டையும் கலந்து குடிச்சிருக்கீங்களா…
திருநெல்வேலி பக்கத்துல….
கிடைக்கும்… விவா டீ....
குடிச்சு ;பாருங்க…. அமோகமா இருக்கும்… அற்புதமா இருக்கும்….
இத கண்டுபிடிச்சா
விஞ்ஞானிய?????!!!!! நிக்க வைச்சு மாலை போடணும்…. எப்படி தோணுச்சு, இப்படி ஒரு விவகாரமான
காம்பினேஷன்னு அவர்கிட்ட கேக்கணும்….
ஒரு வேளை அவரு
கூட காப்பியடிச்சுருப்பாரோ……….. ஆமா…. இதே விவா டீ மாதிரி இன்னொன்னு கிடைக்கும்…
அது…
அது…
பூஸ்ட் காப்பி
Sunday, February 24, 2013
மயிர் நீக்கின்....!!!
தென் தமிழகத்தின்
சில வினோத நம்பிக்கைகள் ….. பட்டையை கிளப்பும் பழக்கங்கள்
கீழ் உள்ள படப்
பதிவை பாருங்களேன்….
மானத்திற்கு அஞ்சி,
மரியாதைக்கு கெஞ்சி எழுதப்பட்ட இந்த வாசகம் என்னை ஈர்த்தது. இவர் அல்ல என் ஆச்சரியத்திற்குரியவர்….
இங்கு மாட்டப்பட்டு
இருப்பது மலிவு விலையில் கிடைக்கும் ஒரு பலகை.
கடன் அன்பை முறிக்கும் ….
!!!
கண்ணைப் பார் சிரி
……….!!!!
என்பது போல…. ஒரு
வணிக ரீதியாக பலமுறை செய்யப்படும் பலகை. எனின் இவர் போல், நிறைய பேர் மாட்டுகிறார்கள்
என அர்த்தம் தரும் சிந்தனையே என் ஆச்சரியம்….
பசுமரத்தாணி…
சிங்க முகம்…….
பெரிய வால்……. ஒரு வகையான குரங்கு………… இவை உலகில் தற்போது இல்லை…அழிந்து வருகிறது….
ஆனாலும் களக்காடு மலைக்காடுகளில் மட்டும் இவை இன்னும் இருந்து வருகிறது…..
சிறு வயதில், இந்த
தகவலை கேட்டு, நான் பயந்து போனேன்… அதை நான் எனதாக்கி கொண்ட வடிவம் வேறு. என்னவோ அவை
கடித்து குதறி விடும் என்றும்… பயங்கரம் எனவும் நானாகவே கற்பனை செய்து கொண்டேன்…
ஆனால்………. இப்போது,
இந்த எண்ணமும் பிம்பமும் தவிடு பொடியானது.
சமீபத்தில், களக்காடு
காடுகளில் சுற்றித் திரியும் போது, இவ்வகை குரங்கு கூட்டத்தை நேரில் பார்த்தேன்… அவைகள், சிங்க முகம் போன்ற, முகசவரம்
செய்யாத தாடிகள் கொண்டவைதான். கருப்பு முகம் தான். தடித்த பெரிய வால்களை கொண்டவைதான்.
அவை அழிந்து வருபவை தான்.
சிறு வயதில் கேட்ட
எந்த தகவலுமே பொய்யானவை அல்ல…
அதற்கு நான் …
நானாக கொடுத்து கொண்ட வடிவம் தான்…. பரிமாணம் தான் வேறு… இன்று அதற்க்கான வடிவம் கொடுத்து
சரி செய்து விட்டேன்… இப்போது பயமில்லை..
பசுமரத்தாணி என
பெரியாரோல் பகுக்கப்பட்ட, ஆழமான என் மனதில் இருந்த இந்த தகவல் இன்று என்னால் திருத்தி
எழுதப்பட்டது….
இது போலவே… என்னால்
பசுமரத்தாணியாக தவறாக எழுதப்பட்ட எத்தனையோ விஷயங்கள் உண்டு…
அவை….. மதம்…..
சாதி…… மொழி……… இலக்கியம் என ஏராளம்…..
என்னை பகுத்து,
என்னை மாற்ற தயாராக இருக்கும் போது… வாழ்வு வேறு விதமாகிறது…
Subscribe to:
Posts (Atom)