Sunday, February 24, 2013

பசுமரத்தாணி…


சிங்க முகம்……. பெரிய வால்……. ஒரு வகையான குரங்கு………… இவை உலகில் தற்போது இல்லை…அழிந்து வருகிறது…. ஆனாலும் களக்காடு மலைக்காடுகளில் மட்டும் இவை இன்னும் இருந்து வருகிறது…..
சிறு வயதில், இந்த தகவலை கேட்டு, நான் பயந்து போனேன்… அதை நான் எனதாக்கி கொண்ட வடிவம் வேறு. என்னவோ அவை கடித்து குதறி விடும் என்றும்… பயங்கரம் எனவும் நானாகவே கற்பனை செய்து கொண்டேன்…

ஆனால்………. இப்போது, இந்த எண்ணமும் பிம்பமும் தவிடு பொடியானது.
சமீபத்தில், களக்காடு காடுகளில் சுற்றித் திரியும் போது, இவ்வகை குரங்கு கூட்டத்தை  நேரில் பார்த்தேன்… அவைகள், சிங்க முகம் போன்ற, முகசவரம் செய்யாத தாடிகள் கொண்டவைதான். கருப்பு முகம் தான். தடித்த பெரிய வால்களை கொண்டவைதான். அவை அழிந்து வருபவை தான்.

சிறு வயதில் கேட்ட எந்த தகவலுமே பொய்யானவை அல்ல…
அதற்கு நான் … நானாக கொடுத்து கொண்ட வடிவம் தான்…. பரிமாணம் தான் வேறு… இன்று அதற்க்கான வடிவம் கொடுத்து சரி செய்து விட்டேன்… இப்போது பயமில்லை..

பசுமரத்தாணி என பெரியாரோல் பகுக்கப்பட்ட, ஆழமான என் மனதில் இருந்த இந்த தகவல் இன்று என்னால் திருத்தி எழுதப்பட்டது….

இது போலவே… என்னால் பசுமரத்தாணியாக தவறாக எழுதப்பட்ட எத்தனையோ விஷயங்கள் உண்டு…

அவை….. மதம்….. சாதி…… மொழி……… இலக்கியம் என ஏராளம்…..

என்னை பகுத்து, என்னை மாற்ற தயாராக இருக்கும் போது… வாழ்வு வேறு விதமாகிறது…

No comments:

Post a Comment